ஏற்காடு, ஆக.4: ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோயில், பொட்டானிக்கல் கார்டன், லேடிஸ் சீட் போன்ற இடங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். மேலும், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து, குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
previous post