சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. 2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சராசரி மக்கள் அதிர்ச்சியடுத்துள்ளனர். பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நடுத்தர குடும்பத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …