அந்தியூர்,பிப்.25: மீன் பிடிப்பதற்காக அத்தாணி தண்ணீர் பள்ளம் வரக்கோம்பை ஏரிக்கு வந்தவர் இடுப்பில் தெர்மாகோல் அடங்கிய சாக்கு பையை கட்டிக் கொண்டு மீன்பிடி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் பிடி வலை அவரது கால்களில் சிக்கியுள்ளது. தொடர்ந்து நீச்சல் தெரியாததால் நீந்த முடியாமல் அவர் ஏரியில் மூழ்கி பலியானார்.
இந்நிலையில், நேற்று காலை அழுகிய நிலையில் சடலமாக மிதந்து உள்ளார். இவரது உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் அத்தாணி காலனி மலையூர் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த குருசாமி (45) என்பதும், இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரியாதேவி, மகன் கோகுல், மகள் தீபா ஆகியோர் உள்ளதும் தெரியவந்தது.