கெங்கவல்லி, ஆக.26: கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு, நீர்வரத்து இல்லாத நிலையில் புல், பூண்டு காய்ந்து போய் காணப்பட்டது. நேற்று நண்பகல் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். தகவலின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) அசோகன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
ஏரியில் திடீர் தீ
previous post