ஏரல், நவ. 17: ஏரலில் அன்னை விஜிஎஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நிறுவனர் விஜி சரவணன் ஆலோசனைப்படி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி கிங்ஸ்டன் ஜெயக்குமார், உறுப்பினர்கள் மணி, முத்துவேல், பிரசாந்த், மதன், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.