கோவை, மே 19: ஈரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (29). அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏடிஎம் மையங்களின் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ம் தேதி பிரபாகரன் பெரியகடை வீதி காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஏடிஎம்மிற்கு பயன்படுத்தப்படும் 6 பேட்டரிகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பிரபாகரன் பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். அதில் ஏடிஎம் மையத்தில் பேட்டரிகளை திருடியது கோவை சூலூரை சேர்ந்த நாகராஜ் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஏடிஎம் மையத்தில் 6 பேட்டரி திருட்டு
0
previous post