கமுதி, ஜூன் 8: கமுதி அருகே அபிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக வீரமுத்துமணி பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணம் ரூ.9500 அனுப்ப முயன்றுள்ளார். இயந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து சென்று விட்டார். ஆனால் பணம் இயந்திரத்திலேயே இருந்துள்ளது. அடுத்து காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த
சிவா(19), சரவணகுமார்(21) ஆகியோர் சென்றபோது, இயந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்தனர். பணத்தை எடுத்து கமுகி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கமுதி போலீசார், வாலிபர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் அவரது பணத்தை ஒப்படைத்தனர்.