ஈரோடு, ஆக.3: ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். இதில், வரும் 31ம் தேதி நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்ய உறுப்பினர் தேர்தல் நடத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செயல்முறைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் மைதிலி ஆகியோர் விளக்கமளித்தனர். இக்கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று தங்களுடைய அனுபவங்கள் மற்றும் கருத்துகளை கூறினர். நிறைவாக பட்டதாரி ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார்.