திருவள்ளூர், ஆக. 5: திருவேற்காடு, எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு ‘துணை’ என்ற அரசு சாரா நிறுவனத்துடன் கல்லூரியின் உளவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
உளவியல் துறைத்தலைவர் அனுஜாவின் பெருமுயற்சியால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. துணை அரசு சாரா நிறுவன அலுவலர் சுபா மற்றும் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆகியோர் கல்லூரியின் கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர்.