மதுரை, ஏப். 14: மதுரையில் எஸ்.எஸ்.தென்னரசு நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அஞ்சலி செலுத்தினார். திமுக அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட செயலாளருமாக இருந்தவர் எஸ்.எஸ்.தென்னரசு. இவரது 32ம் ஆண்டு நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை, கே.கே.நகரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை மாநகர் திமுக சார்பில் உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் பொன்முத்துராமலிங்கம், குழந்தைவேலு, மாநிலத் தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ரவீந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி, பிடி.மணிமாறன், பகுதி செயலாளர் குரும்பன், வட்டச் செயலாளர்கள் வேலு, ராஜேஷ், மகேந்திரன், ராஜேந்திரன், செல்வராஜ் மற்றும் தாமோதரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.