கோவை, செப். 6: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வஉசி 153-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, வஉசி மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது பற்றி கலெக்டர் கூறுகையில், ‘‘நம் தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து, அயராது பாடுபட்டு, தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும், மறையாமல் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொண்டு போற்றவேண்டும்’’ என்றார்.