பெரம்பலூர், ஆக.19: பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உலக மக்கள் நலன்கருதி 51நாள் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையடிவாரத்தில் பகவான் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அருளாசியுடனும், பகவான் அன்னை சித்தர் ராஜகுமார் குருஜியின் அருளாசியுட னும், தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும், ஆளுமையில் உள்ளவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யவும், அரசாங்கத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து மக்கள் நோயற்ற வாழ்வும், குறை வற்ற செல்வமும் பெற்று, அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ ஆண்டுதோறும் தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான 51நாள் கோமாதா பூஜை நேற்று (18ம்தேதி) தொடங்கியது. பூஜைகளுக்கு மாதாஜி ரோகிணி ராஜகுமார் தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அன்னை சித்தரின் சிங்கப்பூர் மெய்யன்பர்கள் வழக்கறிஞர் ரத்தினவேல், செரின் ரத்தினவேல், சீனா தொழிலதிபர் வில்லியம் கோ.வடலூர் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு உறுப்பினரும், கருங்குழி ஊராட்சிமன்றத் தலைவருமான கிஷோர்குமார், மருத்துவர் நவிதாலட்சுமி மற்றும் எளம்பலூர், பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டா ரப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை மாதாஜி ராதா சின்னசாமி மற்றும் மகாசித்தர்கள் அறக்கட்டளை மெய்யன் பர்கள் செய்திருந்தனர். பொது மக்களுக்கும், குழந் தைகளுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.