Friday, March 1, 2024
Home » எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு 337 பயனாளிகளுக்கு ₹67.95 லட்சத்தில் நலத்திட்டங்கள்

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு 337 பயனாளிகளுக்கு ₹67.95 லட்சத்தில் நலத்திட்டங்கள்

by Karthik Yash

திருவண்ணாமலை, ஜன.12: எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி என்று காட்டாம்பூண்டி ஊராட்சியில், புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி ஊராட்சியில், புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் திறப்பு மற்றும் பல்பொருள் அங்காடி கட்டிடம், அரசு மேநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எம்பி சி.என்.அண்ணாதுரை, முன்னாள் எம்பி த.வேணுகோபால், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ மந்தாகினி வரவேற்றார்.

விழாவில், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், 377 பயனாளிகளுக்கு ₹67.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவகளை வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தினந்தோறும் மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்ட பயன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆட்சி நடக்கிறது.
அதன்படி, காட்டாம்பூண்டி ஊராட்சியில் வடிகால்பணி, புதிய சாலை அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான உபகரண வசதிகள், பள்ளி மாணவர்களுக்கு நாற்காலி மற்றும் மேஜைகள், பஸ் நிழற்குடை, புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, கூடுதலாக பள்ளி வகுப்பறைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன் வாடி மைய கட்டிடம் உள்பட ₹3.65 கோடி மதிப்பிலான பணிகள் சிறப்பாக நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 800க்கு மேலாக உள்ள ஊராட்சிகளுக்கும் சேர்த்து உழைக்கும் முதல்வரால், காட்டாம்பூண்டி ஊராட்சி வளர்ந்து இருக்கிறது. இப்பகுதியில் இப்பணிகள் நிறைவேற முன்னாள் எம்பி வேணுகோபால் உறுதுணையாக இருந்திருக்கிறார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டை தவிர நாட்டில் வேறு எங்கும் இல்லை. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் பெண்கள் கல்வி பெற உறுதுணையாக உள்ளது. மாநிலம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், குடும்ப பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர்கள் திருவண்ணாமலை கலைவாணி கலைமணி, தண்டராம்பட்டு பரிமளாகலையரசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோ.கண்ணன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் த.ரமணன், கவுன்சிலர் இரா.ஜோதி, பா.நவ்ஷாத், மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

seventeen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi