ஊட்டி, நவ.8: எல்க்ஹில் பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட எல்க்ஹில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
பின் இதற்கு போதுமான தண்ணீர் வழங்காததாலும், மேலும் பராமரிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த சுகாதார வளாகம் முழுக்க புதர்மண்டி பயனற்று கிடக்கிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள இந்த ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.