Wednesday, September 11, 2024
Home » எலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய்

எலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் எலும்பே நலம்தானா?!மனித உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சகல பகுதிகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டது புற்றுநோய். இந்த பாதிப்பின் தீவிரம் வலிமையான எலும்பையும் விட்டு வைப்பதில்லை. அப்படி எலும்புகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம்… எலும்புகளில் கட்டிகள் உருவாகும் போது எலும்பு புற்றுநோய் பாதிப்பு ஆரம்பமாகிறது. கை அல்லது காலிலுள்ள நீளமான எலும்பிலேயே இது பொதுவாக உருவாகிறது. வளர வளர இது சாதாரண எலும்பு செல்களை அழித்துவிடுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. எலும்பு புற்றுநோயானது குழந்தைகள் மற்றும் இள வயதினரிடையே அதிகம் காணப்படுகிறது.வகைகள் ஆஸ்டியோசார்கோமா(Osteosarcoma) பெரும்பாலான மக்களை பாதிக்கும் எலும்பு புற்றுநோய் வகை இது. 10 முதல் 30 வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கிறது. கைகள், கால்கள் அல்லது இடுப்பெலும்பு பகுதிகளையே அதிகம் தாக்கக்கூடியது இது.ஈவிங் சார்கோமா(Ewing sarcoma)இதுவும் குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிற வகை. கைகள், நெஞ்சு, கால்கள், இடுப்பெலும்பு மற்றும் முதுகு பகுதியில் இதன் பாதிப்பு அதிகமிருக்கும்.கோன்ட்ரோ சார்கோமா (Chondro sarcoma)40 வயதுக்கு மேலானவர்களை பாதிக்கும் புற்றுநோய் வகை இது. கைகள், கால்கள், இடுப்பெலும்பு பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும்.லுக்கிமியா(Leukemia)இது எலும்பு மஜ்ஜை மற்றும் சில எலும்புகளின் திசுக்களை தாக்கும் புற்றுநோய் வகை. ஆனாலும் இதை எலும்பு புற்றுநோயாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை.அரிய வகைகள்மேலே குறிப்பிட்ட வகைகளை தவிர, வேறு சில அரிய வகை புற்றுநோய்களும் உண்டு. அவை பெரும்பாலும் பெரியவர்களையே தாக்குபவை. உதாரணத்துக்கு ஜயன்ட் செல் டியூமர்(Giant cell tumor) வகை புற்றுநோய் பாதிப்பானது பெரியவர்களின் முழங்கால் பகுதியை தாக்க கூடியது.கோர்டாமா (chordoma) என்கிற இன்னொரு அரிய வகை புற்றுநோய் மண்டையோட்டு பகுதியின் அடிபாகத்தையோ, டெயில்போன் எனப்படுகிற தண்டுவட எலும்பு வால் பகுதியையோ பாதிக்கக் கூடியவை.ஃபைப்ரோ சார்கோமா(Fibrosarcoma) என்றும் ஒரு வகை இருக்கிறது. இது முதியவர்களை பாதிக்கும் புற்றுநோய். முழங்கால், இடுப்பு மற்றும் தாடை பகுதிகளை பாதிக்க கூடியது. ஏற்கனவே ஏதோ ஒரு புற்றுநோய் தாக்கி, அதற்காக ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.யாருக்கெல்லாம் ரிஸ்க் இருக்கிறது?* எலும்புகளுக்குள் உலோகங்கள் பொருத்தி கொண்டவர்களுக்கு…. அதாவது எங்கேயாவது விழுந்து அடிபட்டு எலும்பை உடைத்து கொண்டதன் விளைவாக அந்த எலும்பில் மெட்டல் இம்பிளான்ட் செய்து கொண்டவர்களுக்கு.* ஏற்கனவே புற்றுநோய் பாதித்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும், அதிகளவிலான ரேடியேஷன் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்களுக்கும்.* எலும்புகள் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும். ஆனால் கோன்ட்ரோ சார்கோமா வகை புற்றுநோய் மட்டும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு அதிகம் பாதிக்கும்.வேறு என்னவெல்லாம் காரணங்கள்?மரபணு தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் எலும்பு புற்றுநோய் தாக்கலாம். ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது கண்களை பாதிக்கிற புற்றுநோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், Li-Fraumeni syndrome and Rothmund-Thomson syndrome உள்ளவர்களுக்கும்கூட எலும்பு புற்றுநோய் தாக்கலாம். அம்பிலிகல் ஹெர்னியா பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இது மிக மிக அரிதானது என்பதால் பயப்பட தேவையில்லை.அறிகுறிகள்வலி…. இதுதான் முதல் அறிகுறி. இதன் தீவிரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். அதாவது சிலருக்கு மெதுவாக ஆரம்பிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதி மென்மையானது போன்று இருக்கலாம். வேறு சிலருக்கு தீராத வலி இருக்கலாம்.எலும்பு பகுதிகளில் வலி இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை. மூட்டுவலி, பலவீனம் போன்ற வேறு பிரச்சனைகளின் விளைவாகவும் அப்படி வலிக்கலாம். எனவே தொடர்ச்சியாக வலித்தாலோ, வித்தியாசமாக;;; வலித்தாலோ மருத்துவரை அணுகலாம்.மற்ற அறிகுறிகள்எலும்புகள் உடைவது, எலும்பு புற்றுநோயின் காரணமாக எலும்புகள் பலவீனமாகும். அதனால் அவை மிக சுலபமாக உடையலாம், எலும்புகள் இருக்கும் பகுதியில் கட்டிகள் தென்படுவது, இரவில் வியர்வை, எலும்பை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்துபோவது, அதிகமான களைப்பு, காரணமே இல்லாமல் உடல் எடை மெலிவது…பரிசோதனைகள்மேற்சொன்ன பாதிப்புகளையும், அறிகுறிகளையும் வைத்து உங்கள் டாக்டர் உங்களுக்கு எலும்பு புற்றுநோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகப்பட்டால் எக்ஸ் ரே செய்ய சொல்வார். கூடவே வேறு சில பரிசோதனைகளையும் செய்ய அறிவுறுத்துவார். எலும்புகளுக்கான ஸ்கேன், சி..டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் பெட் ஸ்கேன் போன்றவை பரிந்துரைக்கப் படலாம்.இவை தவிர, எலும்பிலுள்ள கட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து பயாப்சி சோதனைக்கும் உட்படுத்தலாம். எலும்பில் புற்றுநோய் இருப்பதை மிக துல்லியமாக காட்டும் சோதனை இது.புற்றுநோயின் நிலைகள்ஸ்டேஜ் – 1;; ;இந்த நிலையில் புற்றுநோயானது எலும்பை தாண்டி வேறு எங்கும் பரவியிருக்காது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்காது.ஸ்டேஜ் – 2புற்றுநோய் பரவியிருக்காது. ஆனாலும் செல்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.ஸ்டேஜ் – 3ஒரே எலும்பில் குறைந்தது இரண்டு இடங்களிலாவது புற்றுநோய் பாதித்திருக்கும்.ஸ்டேஜ் – 4எலும்பை தாண்டி வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும்.சிகிச்சைபுற்றுநோயின் தன்மை, அதன் தீவிரம், பாதிக்கப்பட்டவரின் உடல் நலம், புற்றுநோயின் நிலை போன்றவற்றை எல்லாம் பார்த்துதான் அதற்கான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றுவதே முதலில் செய்யப்படும். பாதிக்கப்பட்ட எலும்பையும், அதிலிருக்கும் கட்டியையும் நீக்கிவிட்டு, வேறு மாற்று எலும்பு பொருத்துவது அல்லது மெட்டல் இம்பிளான்ட் செய்வது போன்றவற்றையும் மருத்துவர் யோசிப்பார். மாற்று எலும்பானது சம்பந்தப்பட்ட நபரின் உடலின் வேறு பாகத்திலிருந்தோ, எலும்பு வங்கியிலிருந்தோ பெறப்படும். கூடவே கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படலாம்.க்ரையோ சர்ஜரி (Cryosurgery)புற்றுநோய் செல்களை உறைய வைக்கிற நவீன சிகிச்சை இது. புற்றுநோய் செல்கள் மெதுவாக வளரும் நிலையில் இது செய்யப்படும்.சிகிச்சைக்குப் பிறகும் கவனம் தேவை எலும்பு புற்றுநோயானது உடலின் வேறு பகுதிகளிலும் பரவியிருக்கலாம். அது சரியாக கவனிக்கப்படாவிட்டால் சீக்கிரமே புற்றுநோய் திரும்பும். எனவே, ஆபரேஷன் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் முடிந்த நிலையிலும் அவ்வப்போது மருத்துவரை சந்தித்து செக்கப் செய்வது பாதுகாப்பானது.(விசாரிப்போம்!)எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி

You may also like

Leave a Comment

twenty + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi