நன்றி குங்குமம் டாக்டர் எலும்பே நலம்தானா?!எத்தனையோ வலிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவைகள் பற்றி ஓரளவு நமக்கு தகவல்களும் தெரியும். ஆனால், எலும்பு வலி பற்றி நம்மிடம் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. அது எதனால் ஏற்படுகிறது? என்ன சிகிச்சை என்பது பற்றி பார்ப்போம்…எலும்புகள் திடீரென மென்மையான மாதிரி உணர்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வு போன்றவையே எலும்பு வலியாக கருதப்படுகிறது.எலும்பு வலி என்பது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எலும்பு வலி இருக்கும். எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும்.எலும்பு வலி ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?* அடிபடுதல்கீழே விழுவது, வாகன விபத்துகளின் போது பலமாக அடிபட்டு கொள்வது போன்றவற்றால் எலும்பு வலி வரலாம். அப்படி விழுவதன் விளைவால் எலும்புகள் உடைந்து, ஃபிராக்சர் ஏற்படலாம். எலும்புகளுக்கு ஏற்படும் எந்தவகையான பாதிப்பும் இதற்கு காரணமாகலாம்.அறிகுறிகள்வீக்கம், அசௌகரியமான உணர்வு, எலும்புகளின் அமைப்பில் வித்தியாசம் தெரிவது, எலும்புகள் அசையும்போது வித்தியாசமான சத்தம் வருவது.* சத்து குறைபாடுஎலும்புகளின் ஆரோக்கியத்துக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் வைட்டமின் டி. இவை இரண்டும் குறையும்போது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற நோய் ஏற்படுவது சகஜம். இந்த நோய் தீவிர நிலையை எட்டும்போது எலும்புகளில் வலி ஏற்படும்.அறிகுறிகள்தசை மற்றும் திசுக்களில் வலி, தூக்கமின்மை, தசைபிடிப்பு, அதிக களைப்பு, பலவீனமாக உணர்தல்.* புற்றுநோய்உடலின் ஏதோ ஒரு பகுதியில் புற்றுநோய் உண்டாகி, அது சீக்கிரமே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவும். மார்பகம், சிறுநீரகம், நுரையீரல், தைராய்டு புற்றுநோய்கள் தீவிரமடையும்போது எலும்புகளுக்கும் பரவும். அதன் காரணமாக எலும்புகளில் கடுமையான வலி ஏற்படும்.அறிகுறிகள்தலை வலி, நெஞ்சு வலி, ஃபிராக்சர், மயக்கம், மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம்.* எலும்பு புற்றுநோய்எலும்புகளிலேயே உருவாகும் புற்றுநோய் இது. இது மிக அரிதான புற்றுநோய் என்றாலும் ஏற்பட்டுவிட்டால் எலும்புகளின் அடிப்படை அமைப்பையே சிதைத்துவிடும். எலும்புகளில் வலி அதிகரிக்கும்.அறிகுறிகள்எலும்புகள் உடைதல், மரத்து போதல், தோலின் அடியில் வீக்கம்.* ரத்த ஓட்டத்தை பாதிக்கும் நோய்கள்சில நோய்கள், உதாரணத்துக்கு ‘சிக்கெல் செல் அனீமியா’ போன்றவை எலும்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்பவை. போதுமான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் எலும்பு திசுக்கள் அழிந்துவிடும். இதனால் எலும்புகள் பலவீனமாகி, அவற்றில் வலியும் ஏற்படும்.அறிகுறிகள்மூட்டு வலி, மூட்டுகளை அசைக்க முடியாத நிலை, பலவீனம்.* தொற்றுஆஸ்டியோமைலிட்டிஸ் என்பது எலும்புகளில் ஏற்படுகிற ஒருவகையான தொற்றுநோய். இது எலும்பின் செல்களை அழித்து, வலியையும் உண்டாக்கும்.அறிகுறிகள்வீக்கம், சிவந்துபோதல், வாந்தி, பசியின்மை, உடல் இயக்கம் குறைதல்.* லுகேமியாஎலும்பு மஜ்ஜைகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு லுகேமியா(Leukemia) என்று பெயர். எலும்பு செல்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜை எலும்புகளில் காணப்படும். அவற்றில் உண்டாகும் புற்றுநோய் கடுமையான எலும்பு வலியை கொடுக்கும். கால்களில் இந்த வலி அதிகமாக இருக்கும்.அறிகுறிகள்தோல் வெளிறிப் போதல், களைப்பு, உடல் எடை குறைவது, மூச்சு விடுவதில் சிரமம்.* பரிசோதனைகள்மருத்துவர் நோயாளியை பரிசோதித்துவிட்டு சில கேள்விகளை கேட்பார். அவை… எந்த இடத்தில் வலிக்கிறது?முதன் முதலில் எங்கே வலி ஏற்பட்டது?வலி நாளாக ஆக அதிகரிக்கிறதா?எலும்பு வலியுடன் வேறு பிரச்னைகளும் இருக்கிறதா?- இவைகளுக்கான பதில்களை கேட்டு தெரிந்துகொண்டு சில ரத்த பரிசோதனைகளை செய்ய சொல்வார். அவற்றில் சத்து குறைபாடு, புற்றுநோய் தாக்கம், தொற்று நோய் போன்றவை இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.தேவைப்பட்டால் எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் போன்றவையும் எடுக்க வேண்டியிருக்கும். சிறுநீர் பரிசோதனையும் தேவைப்படலாம்.* சிகிச்சைகள் உண்டா?முதல்கட்டமாக வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார். இவை எலும்பு வலிக்கான நிரந்தர தீர்வில்லை என்றாலும் நோயாளியை வலியிலிருந்து தற்காலிகமாக மீட்க உதவும்.தொற்றுதான் காரணம் என்றால் ஆன்டி பயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார். அவற்றை அவர் சொல்லும் நாட்கள் வரை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு காரணமான வலி என்றால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாகுறையை சரிசெய்கிற சப்ளிமென்ட்டுகளை எடுத்து கொள்ள சொல்வார்.புற்றுநோயால் ஏற்பட்ட எலும்பு வலி என்றால் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்படும். பாதிப்பின் தீவிரத்தை பார்த்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி வரலாம்.தவிர்க்க முடியுமா?* தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.* வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.* சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் கூடாது.( விசாரிப்போம் ! ) எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி
எலும்பு வலி எதனால் வருகிறது?
135
previous post