மயிலாடுதுறை, ஜூன் 2: மயிலாடுதுறை மாவட்டம், புதுத்தெரு, செட்டிகுளம் சந்தில் வசிப்பவர் செல்வி. இவர் ஓட்டு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டு வீட்டின் உள்ளே ஆறு அடி நீள சாரை பாம்பு புகுந்ததை கண்டு அலறி அடித்து குழந்தைகளுடன் வெளியேறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்க வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது அந்த பாம்பு வீட்டினுள், மறைவிடத்தில் உள்ள எலியை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை கண்டனர். இது குறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கருவியில், எலி பிடிக்க காத்திருந்த சாரை பாம்பு சிக்கியது. பின்னர் சாரை பாம்பு சாக்கு பையில் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக எடுத்து சென்று, அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விட்டனர். இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் பதற்றம் நீங்கி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.