சங்கராபுரம், செப்.2: சங்கராபுரம் அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கராபுரம் அருகே உள்ள வடமாமந்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்தோஷ்குமார் (18), இவர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.