புதுச்சேரி, ஆக. 31: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மினி மாரத்தான் போட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று நடந்தது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளார் செவ்வேள் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் போட்டியில் மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் காரைக்கால், ஏனாம் மற்றும் மாகேவில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
previous post