கிருஷ்ணகிரி, மே 19: கிருஷ்ணகிரி துணை தாசில்தார் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பையனப்பள்ளி கூட்ரோடு அருகே வாகன தணிக்கைaயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற டாரஸ் லாரியில் சோதனையிட்டனர். அதில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எம்.சாண்ட் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்
0
previous post