தேன்கனிக்கோட்டை, ஜூன் 19:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்திச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக வருவாய்த்துறை, காவல் துறை, கனிமவளத்துறை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து வாகன தணிக்கை நடத்தி, கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அஞ்செட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தாசில்தார் கோகுல்நாத் தலைமையில், வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
0
previous post