கீழக்கரை, ஆக.6: நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். இதனால் வாக்களித்து வெற்றி பெறச் செய்த கீழக்கரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, நவாஸ்கனி எம்பி ஆகியோருக்கு, கீழக்கரை திமுக நகர் இளைஞரணி அமைப்பாளரும், நகராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் வீரவாள் பரிசளித்தார். அப்போது கீழக்கரை திமுக நகர் செயலாளர் பஷீர் அஹமது உள்ளிட்டோர் இருந்தனர்.