பரமக்குடி, செப்.2: பரமக்குடி அருகே முத்துராமலிங்கபுரத்தில் எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நாடக மேடையை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். பரமக்குடி விளத்தூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரத்தில் புதிய நாடக மேடை அமைத்து தர வேண்டும் என கிராமத்தினர் எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நாடக மேடை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று, புதிய நாடக மேடையை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ராமநாதபுரம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், ராமநாதபுரம் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், பரமக்குடி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், விளத்தூர் ஊராட்சி தலைவர் அருளானந்தம், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.