உடுமலை, ஆக. 13: மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்திய உடுமலை ஒன்றியம், பெரியபாப்பனூத்து ஊராட்சி மன்ற தலைவர் கரிச்சிக்குமாருக்கு ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி. சிங்பாகேல் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது வழங்கி கௌரவித்தார். இதில், திருப்பூர் மாவட்டம் பெரியபாப்பனூத்து ஊராட்சி மன்ற தலைவர் கரிச்சிக்குமார் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.
இதில், தமிழ்நாடு கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் முனியாண்டி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன், கர்னல் பாண்டியன், இணை செயலாளர் தேவி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ் பஞ்சாயத்துராஜ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஊராட்சி வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி சிங்பாகேலிடம் விருதும், பாராட்டு சான்றிதழும் பெற்றது, பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி வார்டு உறுப்பினர், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் கரிச்சிக்குமார் தெரிவித்தார்.