நன்றி குங்குமம் டாக்டர் தூக்கமின்மைக் கோளாறை Insomnia என்று வகைப்படுத்துகிறது மருத்துவ உலகம். ஆனால், எல்லா தூக்கமின்மையுமே இன்சோம்னியா வகையைச் சேர்ந்தது அல்ல. உணர்ச்சிக் கொந்தளிப்பால் ஏற்படும் மன அழுத்தமும் தூக்கமின்மையை உருவாக்குவதுதான். அதனால், அன்றாட வாழ்வின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டாலே போதும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தூங்குவதில் சிரமம் ஏற்படுவதற்கு தூக்கமின்மை மட்டுமே ஓர் காரணம் அல்ல. மனச்சோர்வு, மன ஒருநிலைப்பாடு குறைவு, பகல் நேரத்தில் ஆற்றல் இல்லாமை, எரிச்சல், வேலையில் கவனம் செலுத்த போராடுவது போன்ற மற்ற காரணிகளும் தூக்கமின்மை பிரச்னைக்கு காரணம் என்று நெதர்லாந்திலுள்ள நரம்பியல் கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் மற்றும் தூக்கமின்மை பிரச்னை இல்லாதவர்களின் மூளை செயல்பாடுகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உணர்ச்சி மற்றும் புலனுணர்வு செயலாக்கத்திற்குக் காரணமான மூளையின் பாகங்களில் பழைய சங்கடமான தருணங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தது. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு மூளையின் பாகங்கள் பழைய நினைவுகளை அதன் பதிவுகளிலிருந்து நீக்கத் தவறிவிட்டது என்று அப்பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.உணர்ச்சிகளை ஒழுங்கமைக்க உதவும் மூளையிலுள்ள பாகங்கள் தூக்கமின்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.; தூக்கமின்மை பிரச்னை உடையவர்களுக்கு மூளையிலுள்ள உணர்ச்சிகளை ஒழுங்கமைக்கிற பாகங்கள் சரியாக; செயல்படாமல் போகிறது. இதனால் உணர்ச்சி கொந்தளிப்பான பழைய நினைவுகளை மூளையின் பாகங்களால் நீக்க முடியாமல் போகிறது.தூக்கமின்மை பிரச்னை உடையவர்கள் உணர்ச்சி கொந்தளிப்புக்கு உள்ளாகாத சாதாரண நாட்களின் இரவுகளைக்கூட மோசமானதாக உணரக்கூடும். ஆனால், நல்ல தூக்கத்தை உடையவர்களுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பால் ஏற்படுகிற மன அழுத்தம் குறைகிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட Rick Wassing.– க.கதிரவன்
எமோஷனை குறைங்க ப்ளீஸ்…
85
previous post