தேன்கனிக்கோட்டை, ஆக.24: கெலமங்கலம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் இருதாளம் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான்லூர்து சேவியர் தலைமையில், விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிஸ், நுண்ணுயிர் பாசனத்தின் பயன்கள் மற்றும் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார் நுண்ணுயிர் பாசனம் பெற தேவையான ஆவணங்கள், மானிய திட்டம் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, அட்மா திட்டம் மற்றும் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விளக்கினார். இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எண்ணெய் வித்து பயிர் சாகுபடி பயிற்சி
previous post