எட்டயபுரம், மே 19:எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் காளிராஜ் (46). விவசாய தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் விளாத்திகுளத்திலிருந்து சுரைக்காய்பட்டிக்கு பைக்கில் சென்றார். எட்டயபுரம் அடுத்த தலைக்காட்டுபுரம் விலக்கு அடுத்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் காளிராஜ் படுகாயம் அடைந்தார். தகலறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
0
previous post