ஈரோடு: இடைதேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போதே அவரது அருகில் நின்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுந்த காட்சி வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று மாலை ராஜகோபால் தோட்டம் என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.திறந்த வேனில் நின்றபடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அருகில் நின்ற வேட்பாளர் தென்னரசு அவ்வப்போது தனது முகத்தை துடைத்துக்கொண்டதை காண முடிகிறது. ஒரு கட்டத்தில் தூக்கத்தில் கண்ணயர்ந்துவிட்ட தென்னரசு லேசான தடுமாற்றத்துடன் விழித்து கொண்டு மக்களை நோக்கி கும்பிட்ட காட்சி வெளியாகியுள்ளது. …