தஞ்சாவூர், செப். 6: பள்ளி கல்வித்துறை சார்பில் ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலத்தாலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டபடி, அனைத்து அரசு பள்ளிகளிலும் (தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’’ திட்டத்தின் கீழ் சுகாதரமான குடிநீர், சுகாதரமான கழிவறை, ஒவ்வொரு பள்ளிகளிலும் நெகிழி இல்லா பள்ளியாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’’ திட்டத்தின் நோக்கங்களான, பள்ளி அளவில் மாணவர்கள் குழுக்கள் அமைத்து சுகாதரமான குடிநீர், சுத்தமான வகுப்பறை, கழிவுநீர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு, பள்ளிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் காய்கறி தோட்டங்கள் அமைத்து தொடர்ந்து பராமரிக்க தேவையான அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பள்ளிகளில் அவ்வப்போது உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தவும், சுகாதரம் மற்றும் தூய்மைப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தி தொடந்து பள்ளிகளை தூய்மையாக வைத்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தப்பட்ட ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின் நோக்கங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பள்ளிகளில் மாணவர்களை தேர்வு செய்து பாராட்டு (Eco Star Award) வழங்கப்பட உள்ளது.மேலும், இத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு \”Best Eco Guide Teacher Award\” சிறந்த பங்களிப்பை அளிக்கும் NGO’s தேர்வு செய்து \”Environment Conservation Award\” அளிக்கப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட அனைத்து நோக்கங்களையும் அனைத்து பள்ளிகளிலும் முறையாக பின்பற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் l தெரிவித்தார். இத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.