கோவை, ஆக. 20: கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் இருந்து கோவை பொன்னையராஜபுரம் ‘சனாதன் சேவா சமிதி’ அமைப்பை சேர்ந்தவர்கள் அனுமதி பெறாமல் ஊர்வலம் செல்ல தயாராகி வந்தனர். தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் அங்கே சென்றனர்.
ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை, தடையை மீறி செல்லக்கூடாது என அவர்களிடம் கூறினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த அமைப்பை சேர்ந்த ராஜேஷ்குமார் அகர்வால், பவன்அகர்வால், ஹரீஷ்அகர்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.