திருச்சி, நவ.21: திருச்சி சித்தாம்பூர்பாளையத்தை சேர்ந்த ஊர்ப்புற நூலகருக்கு ‘டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நல்நூலகர்’ விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். சென்னை பொது நூலக இயக்கம் சார்பில் நல்நூலகருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் நல்நூலகருக்கு வழங்கப்படும் ‘டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நல்நூலகர்’ விருதை திருச்சி மாவட்டம் சித்தாம்பூர் பாளையம் ஊர்ப்புற நூலகர் நர்மதாவுக்கு அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லியோனி, நூலகத்துறை இயக்குநர் சங்கர், மாநில நூலகக்குழு உறுப்பினர் கோபண்ணா, பொது நூலக இயக்கக இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், சென்னை மாநகர நூலக ஆலோசனைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்ப்புற நல் நூலகர் விருது: அமைச்சர் வழங்கினார்
0
previous post