கமுதி, செப்.3: கமுதி அருகே பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் ராமகிருஷ்ணன்(42). கமுதி பேருந்து நிலையம் பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். மேலும் பசும்பொன் பகுதியில் தனியார் சோலார் பிளான்ட்டை நிர்வாகம் செய்து வருகிறார். இந்நிலையில், சோலார் பிளான்ட்டில், செக்யூரிட்டி வேலை பார்த்து வந்த நபர்களை நிறுத்தி விட்டு, புதிதாக வேலைக்கு ஆட்கள் நியமித்துள்ளார். இது குறித்து முன்பு செக்யூரிட்டி வேலை பார்த்து வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜெகன்(32) ராமகிருஷ்ணனிடம், எதற்காக வேலையை விட்டு நிறுத்தினீர்கள் என்று செல்போனில் கேட்டுள்ளார். அதற்குஅவர்,சோலார் நிறுவன உரிமையாளரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு
ஜெகன், சோலார் நிறுவன உரிமையாளரிடம் கேட்டபோது, அனைத்து பொறுப்புகளையும் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டோம் என்று உரிமையாளர் கூறியதால், ஆத்திரமடைந்த ஜெகன் மற்றும் அவரது நண்பர்களான அஜித்குமார்(24), முனியசாமி (24, வில்வமூர்த்தி (22) ஆகியோர் நேற்று ராமகிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.