திருவாரூர், ஆக. 19: ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஊராட்சி செயலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் திருவாரூர் ஒன்றிய அளவிலான கூட்டம் திருவாரூரில் மாநில துணை தலைவர் ரஜினி தலைமையிலும், மாவட்ட தலைவர் தங்கதுரை முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து வரும் ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், இறந்த ஊராட்சி செயலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிபடையிலான வேலை வழங்கிட வேண்டும், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை சேர்த்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.