பெரம்பலூர் மே.24: பெரம்பலூர் மகா மாரியம்மன் கோவில் ஊரணி திருவிழா அழைப்பிதழ்களுக்கு பூஜை.பெரம்பலூர் நகராட்சியில் உள்ள எடத்தெரு மற்றும் கடை வீதி மகா மாரியம்மன் கோவில் ஊரணி திருவிழா வருகிற ஜூன்மாதம் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு நேற்று (23ம் தேதி) காலை 10 மணியளவில் ஊரணி திருவிழா அழைப்பிதழ்கள், மாரியம்மன் முன் வைத்து, பூஜை செய்து, பூசாரிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காரியக்காரர் பழனியப்பன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூசாரி ராம்குமார், குமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.