விருதுநகர், ஆக.11: ஊரக வளர்ச்சி முகமையின் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.16.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் சுகாதார வளாக பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.
கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 முதல் பனைநகர் வரையில் ரூ.48.50 லட்சம் மதிப்பிலான சாலைப்பணிகளை பார்வையிட்டார். சத்திரரெட்டியப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான சைக்கிள் நிறுத்துமிடம், ரூ.5.86 லட்சம் மதிப்பில் சமையலறை கூடத்தை பார்வையிட்டார். அதன்பின் பள்ளி மாணவ, மாணவியருடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கி பயணமிப்பது, உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினார். ஆய்வின் போது திட்ட இயக்குநர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.