Friday, June 2, 2023
Home » ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.501 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.501 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

by kannappan

சென்னை: ஊரக வளர்ச்சி பல்வேறு திட்டப்பணிகளுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக ரூ.501 கோடி விடுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி திட்டத்துறையின் பல்வேறு திட்டப்பணிகளுக்காக 2022-23ம் நிதியாண்டிற்கு ரூ.1003,00,46,610 கோடி ஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக பல்வேறு திட்டப்பணிகளுக்காக ரூ.501,50,23,305 ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2022-23ம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் ஆகும். 2021-22ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை போல 2022-23ம் நிதியாண்டிலும் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன்களுக்கு இடையே உள்ள கிராமபுறங்களில் முன்னுரிமைத் திட்டங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம பங்சாயத்துகள் மற்றும் பங்சாயத்து யூனியன்களுக்கு இடையே ஒதுக்கப்பட்ட நிதியானது 67:33 என்ற விகிதத்தை தொடர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi