கேடிசி நகர், செப்.14: தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகேயுள்ள கீழ வீராணம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன். சுரண்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 9ம்தேதி மனைவி அனிதாவை சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஊத்துமலையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டில் அமுதாபுரம் அருகே பைக் சென்ற போது திடீரென்று தலை சுற்றி பைக்கிலிருந்து அனிதா கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிமாறன் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தினர்.