ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், இவர், வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்தும் வழக்கறிஞர்களின் கண்ணியத்தையும் மக்களிடையே வழக்கறிஞர்களின் நன்மதிப்பையும் கெடுக்கும் விதத்திலும் செயல்படுவதாகவும் அதை கண்டிக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன், துணைத்தலைவர் கவிபாரதி, இணைச்செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் பார்த்திபன், வெற்றித்தமிழன், சாமி, ராஜசேகர், வேல்முருகன், பாலு, மகேந்திரன், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.