திருப்பூர், செப். 1: புதிய ஆதார் எடுக்கவும், ஏற்கனவே ஆதார் கார்டு உள்ளவர்கள் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆதார் மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் செயல்ப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஆதார் தொடர்பான தங்களது திருத்தங்களை செய்து கொள்ள புதிதாக ஆதார் கார்டு எடுக்க விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலையில், ஆதார் சேவை மையங்கள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
இதனால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதில்லை. இதுபோல், அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படுவதில்லை. இதற்கிடையே வேலைக்கு செல்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒவ்வொரு தாலுகா வாரியாக சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் ஆதார் முகாம் நடக்கிறது.