ஈரோடு, ஜூன் 16: ஈரோடு மத்திய மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி, ஊத்துக்குளி மத்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட பாக முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கோவை நா.மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஊத்துக்குளி மத்திய ஒன்றிய செயலாளர் வி.ராஜா முன்னிலை வகித்தார்.
இதில், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. பாக முகவர்களுக்கான இக்கூட்டத்தை தொடர்ந்து, ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் சித்ரா தலைமையில், காவுத்தம்பாளையம் ஊராட்சியை சேந்த 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள், பாக முகவர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.