Friday, March 1, 2024
Home » ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கேலா லில்லி மலர் அலங்காரம்

ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கேலா லில்லி மலர் அலங்காரம்

by Ranjith

 

ஊட்டி,டிச.31: தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கேலா லில்லி மலர்களை கொண்டு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா முழுவதும் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும்.

அதேபோல் பல்லாயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதிலும் மலர்கள் பூத்து காணப்படும்.ஆனால், தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் பூங்கா முழுவதிலும் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.

தற்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர் அலங்காரங்கள் உள்ளன. இதனையே சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.  இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் தற்போது கேலா லில்லி மலர்களைக் கொண்டு புதிதாக மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலாபயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

You may also like

Leave a Comment

twelve − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi