ஊட்டி, ஜூலை 1: மாவட்ட திமுக., பொறுப்பாளர் கே.எம்.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி எம்பி., ஆ. ராசா, இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி ஓரணியில் தமிழ்நாடு குறித்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். 2ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம். (அரசு நிகழ்ச்சி), மதியம் 3 மணி நீலகிரி மாவட்ட திமுக., சார்பில், உதகை ஏடிசி., திடலில் “ஓரணியில் தமிழ்நாடு” பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுதல். 3ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கோத்தகிரியில், மாவட்ட திமுக., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு கூறியுள்ளார்.