சேலம், நவ. 16: சேலம் மாவட்டத்தில் `ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2ம் தொகுப்பை, அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் இத்திட்ட தொடக்க நிகழ்ச்சி, மணக்காடு துவக்கப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் மற்றும் எம்பி டி.எம். செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டு, தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, மண்டலக் குழுத்தலைவர் உமாராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, கவுன்சிலர் சங்கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊட்டச்சத்து பெட்டகங்கள்
0
previous post