உசிலம்பட்டி. ஜூலை 6: உழவர்தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், உசிலம்பட்டியில் நேற்று வீரவணக்க பேரணி நடைபெற்றது. இதன்படி மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நேதாஜி ஆகியோர் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தனர். மாவட்ட அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த பேரணி மதுரை மெயின் ரோடு, தேவர்சிலை பகுதி, தேனி மெயின் ரோடு வழியாக முருகன் கோயில் முன்பாக முடிவுக்கு வந்தது.
பின்னர், அங்கிருந்த உழவர் போராளிகளின் திருவுருவ படங்களுக்கு விவசாயிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் 58 கிராம பாசன சங்க தலைவர் சின்னயோசனை, செயலாளர் பச்சத்துண்டு பெருமாள் மற்றும் வழக்கறிஞர் போஸ், மாவட்டச் செயலாளர் காட்டுராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரன், தொழில் நுட்ப அணி செயலாளர்கள் பூசாரி செல்லையா, சுசித், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் ஒன்றிய செயலாளர்கள் சின்னன், முருகன், ஜெயச்சந்திரன், மிரான் மைதீன், அய்யனார், பழனியப்பன், மின்னல், மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.