ஈரோடு, ஆக. 12: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்தான 74.64 டன் காய்கறிகள் ரூ.25.30 லட்சத்திற்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
காய்கறிகளை வாங்கவும் அதிகாலை முதலே மக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதில், சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 31.65 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 640க்கும், மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கும் வரத்தான 74.64 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.25 லட்சத்து 30 ஆயிரத்து 60க்கும் விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.