நரசிங்கபுரம், செப்.24: ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செங்காந்தள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். செங்காந்தள் உழவர் உற்பத்தியாளரின் நிறுவனத் தலைவர் சுபா முன்னிலை வகித்தார். ஆத்மா குழு தலைவர் டாக்டர். செழியன் சிறப்புரையாற்றினார். இந்தியன் வங்கி உதவி மேலாளர், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆத்தூர் வட்டார அணித்தலைவர் ஏழுமலை, வேளாண் தொழில் சார்ந்த சமூக வல்லுநர்கள், நிறுவனத்தின் பங்குதாரர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.