நாகப்பட்டினம், மே 15: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பால்வளத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து இணை துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார் .
மாவட்ட கலெக்டர் ஆகாஷ், ஆவின் மேலாண் இயக்குநர் அண்ணாத்துரை, செல்வராஜ் எம்பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளூர் சந்தைகளில் முழுமையாக பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால்வளத்தை அதிகரிக்க கால்நடை வளர்ச்சித் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும், ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.