உளுந்தூர்பேட்டை, ஜூன் 20: உளுந்தூர்பேட்டை வளாகத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு வழிப்பறி வழக்கில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இவருடைய தாய் புஷ்பா மற்றும் மனைவி வீணா ஆகியோரையும் போலீசார் கைது செய்து நரேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது திடீரென நரேஷ்குமார் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் எனக்கு மட்டுமே தொடர்புள்ளது. அப்படி இருக்கும்போது எனது தாய் மற்றும் மனைவியை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக தொடர்ந்து அவர் கூச்சல் போட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் மூன்று பேரையும் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் பரபரப்பு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீசாருடன் வாக்குவாதம்
0
previous post