உளுந்தூர்பேட்டை, ஜூலை 29: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கொரட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் கோவுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார் (41) என்பவர் நாட்டுப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பட்டாசு குடோனுக்கு அருகில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து நாட்டு பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசு வெடித்ததில் உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் தொழிலாளர்கள் மகேஸ்வரி (45), எம்ஜிஆர் (65) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.