மதுரை, மார்ச் 4: உளுந்து சாகுபடியில், கூடுதல் விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகளை வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.பயறு வகையில் உளுந்தில் அதிக புரதம் மற்றும் கலோரி சத்துக்கள் உள்ளது. உளுந்து ஒரு குறுகிய காலப் பயிர் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடு பயிராகவும் சாகுபடி செய்யலாம். உளுந்து விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க 1 ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் தெளிக்கலாம். இதனால் பயிர்களில் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.அதேபோல் உளுந்து இரண்டாக உடைத்து சேமித்தால் கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவி பாதுகாத்தால், அவற்றின் விளைச்சல் தரம் அதிகரிக்கும். இத்தகவலை வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.